Taxi Driver Is Struggling To Save His 4 Year Kid

$7534 Raised

90%

of $8327 Goal from 0 supporters

Story

Description

உடல் தளர்ந்து போதல், சீக்கிரம் சோர்வுறுதல், மூச்சுவிடுவதில் சிரமம், சீரற்ற இதயத்துடிப்பு, நோய்த்தொற்றுகள், காய்ச்சல், இரத்தப்போக்கு, இதெல்லாம் ஒருசேர நமக்கு வந்தால் நம்மால் என்ன செய்ய முடியும்? இந்த அவஸ்தைகளை ஒருவரால் தாங்கமுடியுமா? ஜுரம் வந்தாலே கண்ணெல்லாம் அனலாய்க் கொதித்து, தேகமெல்லாம் வலியெடுத்து நம்மை சாய்த்துவிடுகிறதே! இந்த அவஸ்தைகள் நமக்கு வந்தாலும் சரி, நம் அன்பின் உரியவர்களுக்கு இவை ஏற்பட்டு, அதனால் அவர்கள் நம் கண் முன்னே அணுஅணுவாய்த் துடித்துக் கதறும்போது அதை யாரால்தான் பார்க்க முடியும்? உலகின் ஒவ்வொரு மூலையிலும் யாரோ ஒருவர் இந்தக் கொடிய இன்னல்களுக்கு ஆளாகத்தான் செய்கிறார்கள், காரணம் இரத்தப் புற்றுநோய்!


தீபக், ஒரு இரத்தப் புற்றுநோயாளி. ஆனால் தீபக்குக்கு தனக்கு ஏற்பட்டிருக்கும் வியாதி பற்றி தெரியாது, பிறர் எடுத்துக் கூறினாலும் தீபக்குக்கு அது புரியாது, காரணம் அவனுக்கு வயது 4, பள்ளியில் யூ.கே.ஜி படிக்கும் குழந்தை! கடந்த மாதம் நடந்த சிறு விபத்தால், தீபக்கை அவன் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அங்கே அவனின் இரத்தம் பரிசோதிக்கப்பட்டபோதுதான் பேரிடியாய் அந்த சேதி தெரியவந்தது - அவனுக்கு வந்திருபப்து அக்யூட் லிம்போஸ்டிக் லுகேமியா எனும் இரத்தப் புற்றுநோய்.


இப்போது, தீபக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகள் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. புற்று பாதித்த உடல் உறுப்புகளை மாற்றுவதற்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்க வேண்டும், மேலும் பூரணமாக சரிசெய்ய ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். கீமோதெரப்பிக்கு 2.5 லட்சம் ரூபாய் மற்றும் அறுவை சிகிச்சைக்கு 10 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.


போன மாதம் வரை சிறுவர்களுடன் சுட்டித்தனமாய் விளையாடிக் கொண்டிருந்த தன் மகனுக்கு வந்திருக்கும் கொடிய நோயை எண்ணி எண்ணி கலங்கி நிற்கிறார் தீபக்கின் அம்மா.  கார் ஓட்டுநரான தீபக்கின் அப்பா தான் சேர்த்த சம்பாத்தியத்துக்கும் மேலே கடன் வாங்கி மருத்துவச் செலவைச் செய்துவருகிறார். இந்நிலையில், தீபக்கை காப்பாற்றும் முனைப்பில், இணையதளம் மூலம் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் சில நல்ல உள்ளங்கள். இதற்காக, தீபக்கை படம்பிடிக்கும்போதுகூட மழலை மாறாமல் கேமராவைப் பார்த்து வெகுளியாய் சிரிக்கிறான் தீபக்!


இறக்கும் நாளைத் தெரிந்துகொள்வதுபோல் வேறொரு துயரம் இருக்கமுடியுமா? இப்போது தீபக்கின் பெற்றோர் நிலைமையும் இதுதான். இரத்தப்புற்று எனும் பாதக நோயிடமிருந்து தங்கள் குழந்தையைக் காப்பாற்ற உணவு, தூக்கம், சிரிப்பு இதையெல்லாம் மறந்து ஓடிக்கொண்டு இருக்கின்றனர். நொடிக்கு நொடி தீபக்கின் பிஞ்சுக் கையை தன்வசம் இழுத்துக்கொண்டிருக்கும் அந்தக் கொடிய நோயிடமிருந்து மீட்டு அவனை, நாம் மனதுவைத்தால் நிச்சயம் காப்பாற்ற முடியும்!  

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -  - - -

Deepak is a 4 year old kid studying UKG who woke up every day with the excitement of going to school, meeting his friends and playing with friends. He had fun around with his family and friends like any kid. His normal childhood completely changed overnight because of cancer.

"It all started a couple of weeks ago, when  Deepak unknowingly feel down from TVS excel while he was traveling with his father. He had very minor head injury and so his parents took him to the hospital to treat the wound.

Deepak was asked to take blood test as treatment general procedure but shockingly Deepak was diagnosed with blood cancer". 

Despite of financial constraints, Deepak's parents were  happy with Deepak's father Krishnamoorthy earning as a taxi driver and with their small grocery shop.  However,  Deepak's blood cancer has left the family struggling. Not only is the family unable to stay together during this ordeal, but they also have no means to pay for his treatment. Deepak is in Coimbatore with his mother for his chemotherapy treatment, while his father stays in their hometown to work and earn money for his son's treatment. 

As it is a early stage doctors have said that Deepak has to undergo Induction Chemotherapy Followed by Stem Cell Transplant likely the treatment cost would be around Rs 12,00,000/- (Twelve lakhs only).

The day they came to know about their son's health situation Mr and Mrs. Krishnamoorthy are struggling hard to save their son. They have already spent 2 Lakhs from their savings and borrowed from their relatives.

Your little contribution will help Deepak to fight against cancer and will make him play with his friends in school 

Fundraiser Documents

 

A Fundraiser By

UTTHAM SHANMUGAKANI